இராஜதந்திர நோக்கங்களுக்காக மேலும் 3 தூதரகங்கள் விரைவில்! என்கிறார் அமைச்சர் அலி சப்ரி
ஈராக், ருமேனியா மற்றும் ஊலிசரள ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கைத் தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதால், அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊலிசரள மற்றும் ஈராக்கில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் இதற்கு முன்னதாக செயற்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நாடுகளிலும் இலங்கைத் தூதரகங்களை அமைப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக முன்னதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த தூதரங்களை அமைப்பது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன என வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை