நற்பிட்டிமுனையில் இரத்ததான முகாம்
( வி.ரி.சகாதேவராஜா)
நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிவசக்தி வித்யாலயத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவியோடு ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது .
நேற்று (ஞாயிற்றுக்கிழமை( காலை 8 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம் இடம்பெற்றது. இந்து இளைஞர் மன்ற பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இந்த முகாமில் கலந்து உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.
கருத்துக்களேதுமில்லை