வற்றாப்பளை அம்மன் வைகாசி பொங்கல் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி மாவட்ட செயலாளர் தெரிவிப்பு
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான இரண்டாவது முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த அவள்ளிக்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் காலை பத்து மணிக்கு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உட்சவம் 22.05.2023 பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று 29 ஆம் திகதி தீர்த்தமும், ஆனி மாதம் 5 ஆம் திகதி வருடாந்த பொங்கல் உட்சவமும் நடைபெவுள்ளது.
இந்த நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஆலய பெருந்திருவிழாவுக்கு வருடா வருடம் உதவிடும் ஏனைய திணைக்களங்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஆலய உட்சவ காலத்துக்குத் தேவையான ஆலய வளாகத்தை
சூழவுள்ள வீதிகள் புனரமைப்பு, ஆலய வளாக தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களோடு ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்காக சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து வசதி மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்கள் அதில் உள்ள முன்னேற்றம் குறைபாடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது
இறுதியாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது –
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி பொங்கல் உட்சவம் தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் ஆலயத்துக்கு ஐந்து லட்சத்துக்கும்
அதிகமான பத்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பாத்துள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து, குடிநீர், மலசலகூட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்
கருத்துக்களேதுமில்லை