புங்கையூர் புலம்பெயர் உறவுகளின் ஆதரவில் புங்குடுதீவின் விளையாட்டுதுறை வளர்ச்சிக்கு!
புங்குடுதீவில் மாபெரும் கிரிக்கெட் ( ஊசுஐஊமுநுவு ) , வலைப்பந்தாட்ட ( Nநுவுடீயுடுடு ) சுற்றுப்போட்டித்தொடர் .
பாரியளவிலான பரிசுத்தொகையுடன் நடத்தப்படவுள்ள இந்தச்சுற்றுப்போட்டிகளில் புங்குடுதீவிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற இரு அணிகளும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு அணிகளும் , தீவகத்தைச் சேர்ந்த ஏனைய இரு அணிகளும் பங்குபற்றவுள்ளன.
புங்குடுதீவு வீர ,வீராங்கனைகளின் உச்ச திறமைகளை ஒருங்கிணைந்தவாறு வெளிப்படுத்தும் வகையிலும் , விளையாட்டு துறையில் மாகாண மற்றும் தேசிய ரீதியில் புங்குடுதீவின் பெயர் பொறிக்கப்படும் நோக்கில் ஓர் ஆரம்பபுள்ளியாக இந்த விளையாட்டு போட்டித்தொடர் ஏற்பாடு எதிர்வரும் ஜூன் 21 , 22 ஆம் மற்றும் ஜூன் 26 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாணர் பாலம் தாண்டினால் ஏனைய கிராமத்தவர்களுக்கு நாம் எல்லோருமே புங்குடுதீவார் என்பதே நிதர்சனம்.
பண்ணைப்பாலம் தாண்டினால் மற்றவர்களுக்கு எல்லோரும் தீவார்தான் என்பமை மனதில் பொறித்துக்கொள்ளுங்கள்.
பிரிந்து நின்று அழிந்தது போதும் புங்குடுதீவான் என்று ஒன்றுகூடி பறைசாற்றுவோம் வாரீர்.
சிவபாதசுந்தரம் ஜெயதாஸ் ( UK ) 00447521424322 நல்லதம்பி கருணாநிதி ( UK ) +447928620131 ராஜேந்திரம் கஜேந்திரன் ( SWISS ) +41798585642 தவம் பாக்கியம் ( FRANCE ) +33 6 18 44 36 85 போட்டி ஏற்பாட்டுக்குழு – திரு. சோம சச்சிதானந்தன் ( CANADA ) +16472023234 முத்துக்குமாரசுவாமி அகிலன் ( CANADA ) 0016478335131 மற்றும் புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம்
கருத்துக்களேதுமில்லை