பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயார்! ஷெகான் சேமசிங்க உறுதியளிப்பு
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரித்துள்ளார்.
நிதி நெருக்கடியின் போது அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய அவசர உதவிகளை இலங்கை பெரிதும் மதிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை