திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம்!

எப்.முபாரக்

திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பிரதான வீதியின் இருமருங்கிலும் யானை வேலிகள் உள்ள போதிலும் அதனை
உடைத்துக் கொண்டு வீதியில் வந்து நிற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

யானைக் கூட்டங்கள் பகல் வேளையிலே வீதியை நோக்கி படையெடுப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

மாலைநேரங்களில் திருகோணமலை நகரிலிருந்து வேளைக்குச் சென்று வீடுசெல்வோர்
பீதியுடன் பயணிக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் கிராமங்களுக்குப் புகுந்து வாழை மற்றும் தென்னம் தோட்டங்களைத்
துவம்சம் செய்து வருகின்றதோடு,கடந்த காலங்களில் மூன்று பேர் யானை
தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.