இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? ஞானசார தேரரும் கேட்கிறார்

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே நாட்டில் இன, மதவாதப் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டுமென அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய மதத்தவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கூட பேசுகிறார்கள். முன்னாள் எம்.பி. ஒருவர் என்னை தூக்கிலிட வேண்டுமென்கிறார்.

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் பிரிவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவொரு நல்ல விடயம் எனவும் ஞானசார தேரர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.