ஜெரோம், நடாஷாவின் பின்புலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளனவா? சந்தேகம் வெளியிடுகிறார் நளின் பண்டார

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் பின்புலத்தில் அரசியல் நிகழச்சி நிரல் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாட்டில் மீண்டும் இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பற்றி பேச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது இவை உயர் மட்டத்தில் காணப்பட்டன. எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்ததாலேயே அவரை பதவி விலகச் செய்ய முடிந்தது.

அந்த நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலேயே தற்போது சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மதங்களை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்களிடம் நிகழ்ச்சி நிரலொன்று காணப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரல்கள் அரசியலை நோக்கமாகக் கொண்டவையாகும். மீண்டும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். 2019 ஐ போன்று அழிவு ஏற்பட இடமளிக்காது அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். சர்வமதத் தலைவர்கள் , நாடாளுமன்றம் மற்றும மக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் இதன் பின்னணி என்பது தொடர்பில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். – என்றார். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.