ஆஸ்திரேலியா அரசின் ஆதரவை இலங்கை அரசு வரவேற்றுள்ளது! ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கடன் நடைமுறைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,
கருத்துக்களேதுமில்லை