வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்ககோரி வவுனியாவில் போராட்டம்!

வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களைப் பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் நேற்று (வியாழக்கிழமை) கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடிச் சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் நேற்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனப் போராட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், போலி முகவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனமெடுக்க வேண்டும் எனவும் இவர்களால் வலியுறுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.