பலி எண்ணிக்கை அதிகரிப்பு 1000க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 6.45 மணிக்கு நடந்தது. விபத்து இடம்பெற்ற வேளையில் இருந்து தற்போது வரை மீட்புப்பணிகள் ஆரம்பித்து பல உடல்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
கருத்துக்களேதுமில்லை