கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்து கரையோரத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு
ஹூஸ்பர்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரத்தை
தூய்மைப்படுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்த கரையோர பகுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்
கலந்து சிறப்பித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு
செய்திருந்தன.
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல செயற்பாடுகள் ஒரு வாரமாக
நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து
ஜுன் மாதம் 05 ஆம் திகதி வரையான வாரம் தேசிய சுற்றாடல் வாரமாக
பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தால் இவ்வருடத்தின்
சர்வதேச சுற்றாடல் தின விழாவின் தலைப்பாக ; ‘பிளாஸ்டிக் மூலம்
ஏற்படக் கூடிய மாசைத் தடுப்போம்’ எனும் தொனிப் பொருளில் இவ்வருடம்
சர்வதேச சுற்றாடல் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி , துறைசார் அதிகாரிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், இராணுவ படை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துக்களேதுமில்லை