முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடந்தது!
சண்முகம் தவசீலன்
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை முதல்
திங்கட்கிழமை அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 29.05.23 அன்று முல்லைத்தீவு பெருங்கடலில் எடுக்கப்பட்ட கடல் தீர்த்தம் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கடல் நீரில் விளக்கியும் அற்புதம் அம்மன் சந்நிதானத்தில் இடம்பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய விநாயகருக்கான சிறப்பான
பூசைகள் நடைபெற்று தொடர்ந்து அம்மன் சந்நிதானத்தில் அம்மனுக்கான பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து ஏட்டில் எழுதப்பட்ட கண்ணகி அம்மனின் வரலாறு படிக்கப்பட்டது .அதனை தொடர்ந்து நண்பகல் பூசை
இடம்பெற்றது.
இதனை தொடந்து இரவு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வளர்ந்து நேந்து பொங்கல்
பொங்கி படைக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பொங்கல்
நிகழ்வின் போது பெருமளவான பக்த்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு
செய்ய காவடி பாற்செம்பு எடுத்த அதேவேளை இரவு பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை