உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான 10 ஆயிரம்  மரங்களை நடுதல் தொனிப்பொருளில் பல்வேறு நிறுவனங்களில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று அம்பாறை மாவட்டம்  கல்முனை பகுதியில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு
காலாட் படைப்பிரிவில் மரநடுகையின் ஆரம்ப கட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது நிர்வாக  கட்டளை அதிகாரி  மேஜர் தயானந்த மற்றும் சியபத நிதி நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிராந்திய முகாமையாளர் முஹம்மட் பிரிம்சாத், அந்த நிறுவனத்தின்  கல்முனை கிளை முகாமையாளர்
முஹம்மட் பாயிஸ்,  அதன் ஊழியர்களான ஏ.ஜவாத் ,எம்.ரி.எம்.முஜீப், ஏ.ஆதீஸ்
,வி.திசிதரன், எஸ்.அஜய், என்.பவாகரன், ஏ.ஏ.ஏ றிஹான்  ஆகியோர் கலந்து
கொண்டனர்.

பின்னர் அதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா நௌ தீகாயு கடற்படை முகாமில் இந்தத் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. இதன் போது குறித்த முகாமின் கட்டளையிடும்  அதிகாரி பி.இ.எம்.டி. தம்மிக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை,  சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.எம்.மலீக்
தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் மர நடுகை
திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது கல்வி கோட்டத்தை
சேர்ந்த 09 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு பெறுமதி வாய்ந்த  மரங்கள்
பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சியபத நிதி நிறுவனத்தின் கிழக்கு
மாகாண  பிராந்திய முகாமையாளர் முஹம்மட் பிரிம்சாத் சியபத நிதி நிறுவன
கிளை முகாமையாளர் முஹம்மட் பரீஹ், கல்முனை கிளை முகாமையாளர் முஹம்மட்
பாயிஸ்,  அதன் ஊழியர்களான ஏ.ஜவாத், எம்.ரி.எம்.முஜீப், ஏ.ஆதீஸ், வி.திசிதரன், எஸ்.அஜய், என்.பவாகரன் ,ஏ.ஏ.ஏ றிஹான்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் குறித்த பாடசாலை வளாககத்திலும் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.

இந்த மாபெரும்  மர நடுகை திட்டத்தில் தென்னை ,மாமரம், தோடை, மாதுளை
,ஜம்பு ,முந்திரிகை, உள்ளிட்ட   மரங்கள் உள்வாங்கப்பட்டு நடப்பட்டதுடன்
அதிகமான இராணுவத்தினர், கடற்படையினர், அதிபர்கள், ஆசிரியர்கள் ,
ஆர்வத்துடன் பங்கேற்று இருந்தனர்.

எதிர்காலத்தில் சூழலைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ்  பொது இடங்கள்
கடற்கரைப் பிரதேசங்கள்  அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள்  மத
ஸ்தாபனங்கள், வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின்
பங்களிப்புடன் இந்தத் திட்டம் சியபத நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட
உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.