170 கி.மீ. தூரம் மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. -(T)

மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக 170 கி.மீ. தூரம் பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மகளைப் பார்க்க 170 கி.மீ தூரம் பயணம் செய்த மூதாட்டி
சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு சம்பவம் வெளியாகி நம்மை மகிழ்ச்சியாக்கும், சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நம் இதயத்தை கனக்கச் செய்துள்ளது.

170 கி.மீ. தூரம் மகளைப் பார்ப்பதற்காக 8 நாட்களாக பயணம் செய்த தாயால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குணாவைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் முடியாத நிலையில், தன் மகளை பார்ப்பதற்காக மூன்று சக்கர வாகனத்தில் 8 நாட்களாக 170 கிமீ தூரம் பயணம் செய்துள்ளார்.

கொளுத்தும் வெயிலில் அந்த தாய் தன் மகளைப் பார்ப்பதற்காக இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், என் மகளைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. அவளை பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் நான் மூன்று சக்கர வாகனத்தில் புறப்பட்டேன் என்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த தாயின் பாசத்தைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.