பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: கையில் ஆயுதத்துடன் தப்பியோட முயற்சிக்கும் வைரல் வீடியோ…T
பிரான்சில் குழந்தைகள் உட்பட 6 பேரை கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
குழந்தைகள் மீது கத்திக்குத்து
தென்கிழக்கு பிரான்சில் உள்ள அன்னேசியில் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 9:45 மணியளவில் பூங்காவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Haute-Savoie மாகாணம் வெளியிட்ட அறிக்கையின்படி, சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மிக விரைவாகத் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
குறைந்தது எட்டு பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியான வீடியோ
பொலிசாரிடம் பிடிபடுவதற்கு முன் அந்த நபர் தப்பி ஓடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
ஆறு வினாடிகள் கொண்ட வீடியோவில், கருப்பு நிற ஷார்ட்ஸ், ஸ்வெட்ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒரு பூங்காவில் ஓடுவதையும், உள்ளூர்வாசிகள் அவரை துரத்துவதையும் காட்டுகிறது. பின்னணியில் சில அலறல்கள் கேட்கின்றன.
கருத்துக்களேதுமில்லை