பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு!
பாறுக் ஷிஹான்
பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற
கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல்
ஹாதி தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானதுடன் கல்முனை மேல் நீதிமன்ற
நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட்
றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி
எம்.லாபீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் முதலில் மத அனுஸ்டானம் இடம்பெற்றதைத் தொடர்ந்து கல்முனை
சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ.றைசுல் ஹாதி தலைமையுரை மற்றும்
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி உரையுடன் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமானது.
தொடர்ந்து இந்தக் கலந்துரையாடலில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்
வைத்திய கலாநிதி என். இதயகுமார் வளவாளராகக் கலந்து கொண்டு பக்கவாதம்
என்றால் என்ன?, ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்வது ஏன்? , உணவுப்பழக்க
வழக்கங்கள் பேணப்படுவது எவ்வாறு? ,நீண்ட நேர தூக்கம் மன அழுத்தம்
தொடர்பான விழிப்பணர்வு, பக்கவாதம் நோயின் தன்மை, அதற்கான சிகிச்சை
முறைகள், தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கலந்துரையாடலில் நோயாளி
ஒருவரும் அழைக்கப்பட்டு அவரது அனுபவ பகிர்வும் அவையோருக்கு தெளிவு படுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் நீதிமன்ற
பதிவாளர்கள், உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து
கொண்டதுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி ரோஸன்
அக்தரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை