ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..T

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

ஹனிமூன் சென்ற தம்பதிகள்
பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளாக இருந்தால் ஹனிமூன் என்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து நேரத்தினை செலவிடுவதை நாம் அவதானித்திருப்போம்.

இதில் சுற்றுலா தீவாக மாறி வருகின்றது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவு ஆகும். இந்த தீவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர்.

ஆம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ், மற்றும் விபூஷ்னி என்ற பெண்ணிற்கும் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் ஹனிமூனிற்கு பாலி தீவிற்கு சென்றுள்ளனர்.

குறித்த தீவில் விரைவு மோட்டார் படகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வாழ்க்கையை தொடங்க சுற்றுலா சென்ற இடத்திலேயே இவ்வாறு இவர்களின் வாழ்க்கை முடிந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.