ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய நன்மைகள்! கிடைக்கும் சாத்தியம் என்கிறார் ஆசுமாரசிங்க

2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜப்பானில் 30 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அனுப்பவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அதனால் ஜப்பானின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஜனாதிபதியின் ஜப்பானுக்கான விஜயத்தின்போது உலகில் சனத்தொகையில் நூற்றுக்கு 30 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர் செட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் ஆரோக்கியமான பதிலொன்றை வழங்கி இருந்தன. அதேபோன்று ஜப்பான் பிரதமர்கள் இருவர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி சிறந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஜப்பான் அரசாங்கத்துடன் செய்துகொண்டிருந்த மொனோரேல் வேலைத்திட்ட ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக நீக்கிக்கொண்டதன் காரணமாக ஜப்பான் எங்களுடன் கோபத்துடனே இருந்தது. என்றாலும் ஜப்பானுக்கான விஜயத்துடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு சிறந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகியது.

அத்துடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டால் ஒரு தரப்பாக இருந்து அதில் இருந்து நீங்கிக்கொள்ள முடியாத வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் ஜப்பான் முதலீட்டாளர் குழுவொன்று 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான முதலீடொன்றை அடுத்த வருடமாகும்போது எமது நாட்டுக்கு கொண்டுவர வாக்குறுதியளித்திருக்கிறது. அதேபோன்று 2024 ஆம் ஆண்டில் ஜப்பானில் 30 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அனுப்பவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்காக தொழில் பயிற்சி வழங்குவதற்குத் தயாராகி வருகிறோம். அதேநேரம் பௌத்த பல்கலைக்கழகம் அமைத்தல், கண்டி அபிவிருத்தி வேலைத்திட்டம் போன்ற விடயங்களுக்கும் ஜப்பான் நன்கொடை வழங்கவும் தேவையான ஒத்துழைப்பை பெற்றுத்தரவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

மேலும், ஆர்.செட் அமைப்புக்குள் நுழைவதன் மூலம் எமக்கு கிடைக்கும் நன்மை விசாலமானது. ஆர்.செட் அமைப்பு என்பது ஆசிய பசுபிக் 15 நாடுகளைக்கொண்ட அமைப்பாகும். தற்போதும் ஜப்பானுக்கு தேயிலை, புடைவை ஏற்றுமதி செய்யும்போது 10,6வீத வரிஅறிவடப்படுகிறது.

இந்த அமைப்புக்குள் நுழைவதற்கு எமக்கு முடியுமானால் இந்த வரிகளில் இருந்து நீக்கி, சிறந்த பொருளாதார சந்தை ஒன்றை ஏற்படுதிக்கொள்ள முடியுமாகிறது. அதன் பிரகாரம் நூற்றுக்கு 30 வீதக்கும் அதிக பங்குச் சந்தையொன்றை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதனால் 2048 ஆம் ஆண்டு ஆகும்போது வளர்ச்சியடைந்த நாடாகுவதற்கு பொருளாதார மறுசீரமைப்பினூடாக முன்னுக்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தும் செயற்பாடுகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும். அதற்காக அனைவரும் ஜனாதிபதியின் வேலை திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.