தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படும் வைத்தியர் சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை