மின்கட்டணம் செலுத்தாத விகாரைகளின் மின்சாரத்தை துண்டிக்கிறது மின்சாரசபை! ஓமல்பே தேரர் குற்றச்சாட்டு
மின்கட்டணங்களை செலுத்தாத பௌத் தஆலயங்களுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களை அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மின்கட்டணங்களை அதிகரித்துள்ளதால் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆலயங்களுக்கான மின்கட்டணங்கள் 555 வீதத்தால் அதிகரித்தவேளை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆலயங்களுக்கு சூரியசக்தியில் இயங்கும் மின்கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அவ்வாறான எவையும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அம்பாந்தோட்டையில் உள்ள பௌத்த ஆலயம் உட்பட் சில ஆலயங்களுக்கான மின் இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையிலும் உதுவககந்தையிலும் உள்ள இரு பௌத்த ஆலயங்கள் 25 ஆயிரம் மற்றும் 95 ஆயிரம் ரூபா மின்கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. அவர்கள் தங்களால் முடிந்தளவு கட்டணத்தை செலுத்தினார்கள.; கிராம மக்கள் வழங்கிய பணத்;திலிருந்தே கட்டணத்தை செலுத்தவேண்டும் என ஒமல்பே தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்களுக்கு தற்போது ஆலயங்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு பணம் இல்லை. அரசாங்கம் அவர்களுக்கு வருவாய் வரும் வழிகளை அழித்துவிட்டது எனவும் ஒமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.
கட்டணங்களை செலுத்தாததன் காரணமாக வறிய மக்களின் வீடுகளுக்கான மின்சாரத்தையும் இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் மாத்திரமல்ல, சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டு;ள்ளனர். இதன்காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். மக்களை இந்த நியாயமற்ற செயலிற்கு எதிராக ஒன்றுதிரட்டவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை மி;ன்சாரசபையின் தலைவர் நலிந்த இலங்ககோன், குறிப்பிட்ட காலத்தில் மின்கட்டணங்களை செலுத்தாத இடங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்படும். ஆலயங்கள் வீடுகள் எந்த இடமாகவிருந்தாலும் அவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களே. எந்த வாடிக்கையாளருக்கும் நாங்கள் விசேட சலுகைகளை வழங்கமுடியாது. மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை