யாழில் பரபரப்பரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு – பொலிஸார் விசாரணை..T

யாழ். நவாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நேற்று(13.06.2023) இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலதிக விசாரணை

யாழில் பரபரப்பரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு - பொலிஸார் தீவிர விசாரணை | Jaffna Sword Attack Police Investigation

தாக்குதலின் பின்னர் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.