இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை அரசிடம் இருந்து காப்பாற்றி உதவுக! யுனைஸ்கோவிடம் கம்மன்பில கோரிக்கை
‘இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க உதவுமாறு’ ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் புராதனச் சின்னங்களை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் பகுதியொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் எழுந்த பிரச்சினையின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்கவைக் கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சில நாள்களிலேயே பேராசிரியர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
‘நாங்கள் பாரம்பரிய தளங்களை பிரிவினைவாதிகள் அல்லது தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், எங்கள் சொந்த அரசாங்கத்தால் அல்ல, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் தவறான மற்றும் தவறான செய்திகளை எந்தவித தயக்கமும், கேள்வியும் இன்றி ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை