தொழிலாளர்கள் சட்ட சீர்திருத்தங்களுக்கு நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை! என்கிறார் மனுஷ
அரசாங்கத்தின் புதிதாக முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்பால் இயற்றப்பட்டதோ அல்லது முன்மொழியப்பட்டதோ அல்ல என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றுமாறு சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்த சர்வதேச நிறுவனமோ இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சீர்திருத்தங்களில், பாரபட்சம் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட எந்த விதமான துன்புறுத்தலையும் தடுக்க சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட சீர்திருத்தங்களில் பகுதி நேர வேலையும் அடங்கும், அதே நேரத்தில் பெண் தொழிலாளர்களுக்கான இரவு ஷிப்ட் விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை