அறநெறிப் பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

 

திருகோணமலை-அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் சுந்தரலிங்கத்திடம் வழங்கி வைத்தார்.

தமிழ்ப் பண்பாடு மற்றும் சைவநெறியைப் பேணிப் புரக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் அறநெறிப் பாடசாலைகளில் அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பள்ளி முதன்மையான தொன்றாகும்.

இந்த அறநெறிப் பாடசாலையில் 125 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் எனவும் இவர்களுக்குச் சீருடை இல்லாத குறையை நீக்கும் பொருட்டாகத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் சீருடை கொள்வனவுக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகம்மாள் அறநெறிப் பாடசாலைக்கு வழங்கியது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் சுந்தரலிங்கத்திடம் வழங்கி வைத்தார்.

குச்சவெளியைச் சேர்ந்த திருச்செல்வம் பிரபாகரன் நினைவாக இச்சீறுடைக்கான காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.