மலையமக்கள் சுரண்டப்படும் விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதற்காக ஜெனீவா செல்கின்றார் அமைச்சர் ஜீவன்
மலையமக்கள் சுரண்டப்படும் விடயத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் ஜெனீவா செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேயிலை தொழில்துறையில் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் சுரண்டல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக ஜெனீவாவில் ஒக்ரோபரில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தனது தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் சுரண்டல்களை அம்பலப்படுத்தவேண்டிய தருணம் இது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சர்வதேச தேயிலை கொள்வனவாளர்களிடம் தாங்கள் நியாயமான வர்த்தகம் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை கடைப்பிடிப்பதாக பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்ற போதிலும் உண்மையில் அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை என்பதை நான் அம்பலப்படுத்தப்போகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை