அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க கல்முனை கிளை வருடாந்த பொதுக்கூட்டம்!

 

நூருல் ஹூதா உமர்

அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனைக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனைக்கிளை உப தலைவர் எம்.எஸ். அப்துல் மலிக் தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித் கலந்து கொண்டார். மேலும் பல பிராந்திய பணிமனை பிரிவுத்தலைவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் விரைவில் ஓய்வு பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி தொழிற்சங்கம் அவர்களுக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களை வழங்கியது. பொது சுகாதாரத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளின் பங்களிப்புகளுக்கு தொழிற்சங்கத்தின் நன்றியை தெரிவித்த அவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பிலும் இங்கு உரை நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.