விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் நிரோஷன் பெரேரா வலியுறுத்து
விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
சுயாதீன ஆணைக்குழு சபை பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
அந்தவகையிலேயே வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் கருத்துரு நல்லதாக இருந்தாலும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை