முடங்கியது நுவரெலியா !

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக உள்ள நுவரெலியா தபால் நிலையத்தினை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான ஜெட்வின் நிறுவனத்திடம் ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நுவரெலியா பிரதான தபால் நிலையத்தினை சுற்றி கருப்பு கொடி கட்டி தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் இந்த போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் ,அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.