இந்தியாவின் பாதுகாப்பில் நாம் கரிசனை கொள்வோம் ஒரு நாட்டுடன் மட்டும் சேர்ந்து செயற்பட மாட்டோம்! வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி திட்டவட்டம்

இலங்கை இந்தியாவின் நியாபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளைக் கருத்தில் கொள்ளும் ஆனால் ஓரு நாட்டுடன் மாத்திரம் சேர்ந்து செயற்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது நாட்டுக்கும் மக்களுக்கும் எது மிகசிறந்ததோ அதனை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் டெய்லிமிரரின் ஓன்பயருக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கேந்திர அமைவிடம் சர்வதேச வல்லரசுகளுடனான அதன் நெருங்கிய உறவுகள் பல வாய்ப்புகளை வழங்குகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவைரும் இலங்கைமீது செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் நாங்கள் இந்த பாதையில் மிகவும் அவதானமாக பயணித்து இ;ந்து சமுத்திரம் எப்போதும் அமைதிப்பிராந்தியமாக விளங்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும். அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய அயல்நாடு என்பதை இலங்கை எப்போதும் மனதில் வைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இந்தியா வெளிப்படுத்தும் எந்த நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளையும் இலங்கை கருத்தில்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நியாயபூர்வமான கரிசனைகள் என்பது சீனாவின் கப்பல்களை திருப்பி அனுப்புவதையும் உள்ளடக்கியதா என்ற கேள்விக்கு ஊகங்களிற்கு பதிலளிக்க விரும்பவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.