கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உயர் கல்விப் பூர்த்திக்கு சிறந்த நிறுவனம்! பாதுகாப்பு செயலாளர் கமல் பெருமிதம்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜெனரல் குணரத்ன உள்ளூர் மற்றும் சர்வதேச தரவரிசையில் மேலும் உயர் நிலைக்கு கொண்டுவந்த இப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மற்றும் கல்வி நிர்வாக ஊழியர்களின் சேவைகளைப் பாராட்டினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிர்வாக சபையின் தற்போதைய தலைவராக ஜெனரல் குணரத்ன செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.