தியாகிகள் நினைவுதூபி ஓட்டமாவடியில் திறப்பு!

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் தியாகிகள் நினைவுத் தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டனர்.

அத்துடன் உயிர் நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச நலன்விரும்பிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.