அம்பாறை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் நிர்வாக தெரிவும்!

 

நூருல் ஹூதா உமர்

அம்பாஙை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மண்டபத்தில் அமைப்பின் பதில் தலைவர் எம்.ஏ.பர்ஸான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய உதைப்பந்து மேம்பாடு, அம்பாறை மாவட்ட உதைப்பந்து நடுவர்கள் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள், நடுவர்கள் கௌரவிப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டனர். அதனடிப்படையில் போசகர்களாக சிரேஷ்ட நடுவர்களான எம்.ஏ. நபார், எம்.ஐ.எம். அமீரலி ஆகியோரும், ஆலோசகர்களாக ஏ. எம்.எம். இப்ராஹிம், ஏ.எம். இப்ராஹிம், ஏ.எல்.ஏ. கனி, யூ.எல்.எம். ஹனீபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் தலைவராக எம்.எல்.எம். ஜமால்தீன், தவிசாளராக எம்.எல்.ஏ. தாஹீர், செயலாளராக அலியார் பைஸர், பொருளாளராக, எஸ்.எல்.வை. அரபாத், உப தலைவர்களாக எம்.ஏ. பர்ஸான், ஏ.எம். றிஷாத், எஸ்.எம். உபைத்தீன், உப செயலாளராக ஏ.எம். ஜப்றான், உப பொருளாளராக ஜே.ஏ. மஜித், கணக்கு பரிசோதகர்களாக எம். எம். றஜீப், ஐ. அஸ்பாக் ஆகியோர் சபையால் தெரிவு செய்யப்பட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.