போலி மாணிக்கக் கற்களை கொடுத்து நகைகள் மோசடி! களுத்துறையில் ஒருவர் கைது
போலி மாணிக்கக் கற்களைக் காட்டி மக்களை ஏமாற்றி தங்க நகைகளைப் பரிமாறிக்கொண்ட மூன்று பேர் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மெட்டியகொட, நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலும் இருவருடன் இணைந்து போலி இரத்தினக் கற்களை வழங்கி அதற்குப் பதிலாக பெறுமதியான தங்க நகைகளைப் பெற்றுக் கொண்டதாக காலி மற்றும் களுத்துறையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் இவர்களிடமிருந்து வைப்பற்றப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை