கூரிய ஆயுதத்தால் யுவதியின் தலையில் தாக்கிய போதைப்பொருளுக்கு அடிமையானவர் பிலியந்தலையில் கைது!
கூரிய ஆயுதத்தால் யுவதி ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியின் தலையில் சந்தேக நபர் கத்தியால் தாக்கும் காட்சி சிசிரிவியில் பதிவாகியிருந்தது.
19 வயதுடைய யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இவர் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே சந்தேக நபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை