முல்லைத்தீவில் அஸ்வெசும கொடுப்பனவில் உள்வாங்குமாறு கோரி போராட்டம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சமூர்த்தி வங்கிக்கு முன்னால் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

‘ஏழைகள் வாழ்வில் ஏழனம் செய்யாமல் எங்களை உள்வாங்கு, அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும் உள்வாங்கு” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடமும் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடமும் இது தொடர்பாக கோரிக்கை அடங்கிய மனுவொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.