அட்டன் நோர்வூட் பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

அட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பேரில், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தோட்டத்திலுள்ள தேயிலை புதருக்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல கால்நடை வைத்திய பிரிவுக்கு கொண்டுச்செல்ல நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.