முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!
பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை