சக்சுரின் யானை தாய்லாந்திற்கான பயணத்தை ஆரம்பித்தது- விமானத்தில் ஏற்றப்பட்டது
சக்சுரின் யானை தாய்லாந்திற்கு அனுப்புவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டுடன் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
22 வருடங்களிற்கு முன்னர் இலங்கைக்குக்கு வழங்கிய யானையை மீளப்பெற்று சிகிச்சைக்கு உட்படுத்த தாய்லாந்து தீர்மானித்துள்ள நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் யானை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை விசேட வாகனமொன்று சக்சுரின் யானையை தெகிவளை மிருக்கக்காட்சி சாலையிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் யானைக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் மிகமெதுவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை யானையை கூண்டுடன் ரஸ்ய தயாரிப்பு இலுசன் 76க்குள் ஏற்றும் நடவடிக்கைககள்
ஆரம்பமாகியுள்ளன.
கருத்துக்களேதுமில்லை