மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன!

வண்ணாத்தவில்லு – கரைத்தீவு பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் இன்று (2) காலை  கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பில் விஜய கடற்படை முகாம் வீரர்களால் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

1,947 கிலோ பீடி இலைகள் கொண்ட 65 பொதிகளுடன் வண்ணாத்தவில்லு கரைத்தீவு  பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய நபரே சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதுடன், பீடி இலைகளை கடத்தப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகொன்றையும் கடற்படையினர்  கைப்பற்றினர்.

இந்த பீடி இலைகள் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டபோதே கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.