மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர்.

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர்.

அவர் பயணித்த கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகில் உள்ள கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இதன் போது காயமடைந்த மூவரும் உடனடியாக அம்பியூம்புலன்ஸ் வண்டி மூலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.