தேசிய மட்ட கிரிக்கெட் மற்றும் கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து கிழக்கு மாகாணம்!

47 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகள் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு தொகுதியிலும், கராத்தே போட்டிகள் சுகததாச உள்ளக அரங்கிலும் நடைபெற்று முடிந்தது.

இப்போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆண்கள் அணி தங்கப்பதக்கமும்,  பெண்கள் அணி வெள்ளிப்பதக்கமும் சுவீகரித்ததுடன், கராத்தே போட்டிகளில் ஒரு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தமாக 5 பதக்கங்களை  கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் சுவீகரித்து சாதனை நிலைநாட்டிள்ளனர் எனக் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம். நௌபீஸ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.