இளைஞர்களைத் தொழில் முனைவாளர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தமர்வு!
நூருல் ஹூதா உமர்
தொழிவாய்ப்பற்று புதிய தொழிவாய்ப்பை நாடியுள்ள இளைஞர்களைத் தொழில் முனைவர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தரங்கொன்று சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் கிழக்கு நட்புறவு ஒன்றிய ஏற்பாட்டில் சொப்ற் கியார் அனுசரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் பிரபல தொழில் முனைவரும், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தலைவருமான பொறியலாளர் எம்.எம். நசீர் பிரதான வளவாளராக கலந்துகொண்டு தொழில் முயற்சி, தொழில் மேம்பாடு, தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விடயங்களை தன்னுடைய அனுபவத்துடன் கூடியதாக இளைஞர்களுக்கு விளக்கினார். தொடர்ந்தும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிதிப் பணிப்பாளரும், சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு கல்வியுடன் கூடிய தொழில் பயிற்சிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம். பைசர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமிழுள் இலாஹி, பிரதேச செயலக அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச இளைஞர், யுவதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை