பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கல்!

 

நூருல் ஹூதா உமர்.

கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற ‘உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டம்’ சேவை பகுப்பாய்வு கருவி தயார்ப்படுத்துவதற்கு பொருத்தமான பயிற்சிநெறி கோறளைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். நவநீதன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளனமும் மற்றும் கனேடிய உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளனமும் கோறளைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ள ஆறு வருட செயற்திட்டம் தொடர்பில் சேவை பகுப்பாய்வு கருவி உருவாக்கப்படல் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

குடிமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படும் பொது சேவைகளை பகுப்பாய்வு செய்ய இந்த சேவை பகுப்பாய்வு கருவி பயன்படுத்தப்படும் என்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதும், அதிகார வரம்பின் அனைத்து குடிமக்களுக்கும் சமமான முறையில் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாக அமைய உள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

கனேடிய தேசிய வளவாளர்கள் இந்த சேவை பகுப்பாய்வு கருவி குறித்து எதிர்காலத்தில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்ய உள்ளதுடன் மேலும் அதை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவை வழங்குவது தொடர்புலும் இங்கு ஆராயப்பட்டது.

இந்த பயிற்சி கலந்துரையாடலில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகர பிரதம வளவாளராகக் கலந்து கொண்டதுடன் இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் பீ. பிரதீப் பயிற்சிநெறிக்கு நெரிப்படுத்தித்துனநராகக் கலந்து கொண்டதுடன் உள்ளூராட்சி மன்றங்களின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், கோறளைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகாத்தர்கள், சமூக பொதுநிறுவன நிர்வாகிகள் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.