கந்தளாயில் தொலைபேசி கோபுரம் வீழ்ந்து தபாலகத்துக்குச் சேதம்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டடம் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் அருகில் உள்ள தபாலகக் கட்டடம் சேதமடைந்துள்ளது. தபாலகக் கட்டடத்துக்கு மேலால் இக் கோபுரம் வீழ்ந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.