‘ஹரக்கட்டா’வின் ஆலோசனையிலேயே கல்கிஸை நீதிமன்றத்தில் ஒருவரைச் சுட்டுக்கொல்ல முயற்சி!  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு

போதைப்பெருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’வின் ஆலோசனையின் பேரிலேயே  அண்மையில்  கல்கிஸை  நீதிவான்  நீதிமன்றத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை வழிநடத்தியவரும் கைது செய்யப்பட்டனர் எனப்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 4 ஆம்  திகதி கல்கிஸை  நிதிவான்  நீதிமன்ற மண்டபத்தில் குற்றம் சாட்டப்பட்ட  ஒருவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன்போது எவருக்கும்  காயம் ஏற்படவில்லை, பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீதிமன்றத்தை விட்டு  வானில் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.