கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரிக் கவனவீர்ப்புப் போராட்டம்
அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள்இ கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு கோரி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை காலை போராட்டமொன்றை ஆரம்பித்த நிலையில்இ அது தொடர்கிறது.
அவர்கள் தற்காலிகமாக பந்தல் அமைத்துஇ சுலோகங்களை ஏந்தியவாறு சத்தியாகிரக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய தலைவர் கூறுகையில் –
கடந்த பல வருடங்களாக டெங்கு தடுப்பு உதவியாளர்களாகக் கடமையாற்றும் எங்களை அரசால் நிரந்தரமாக நியமிக்க முடியாமல் இருக்கிறது. எங்களுக்கான நிரந்தர நியமனம் சுகாதார அமைச்சின்இ சுகாதார திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். தினம் 730 ரூபா அளவில் கிடைக்கும் சம்பளம் இப்போதைய நாட்டின் நிலைமைக்கு போதாமல் இருக்கிறது.
ஜனாதிபதிஇ பிரதமர்இ சுகாதார அமைச்சர்இ சுகாதார அமைச்சின் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கு எங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும்இ இதுவரை எங்களுக்கான தீர்வு கிட்டவில்லை. விரைவில் அரசாங்கம் எங்களுக்கான நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அத்தோடுஇ நிரந்தர நியமனம் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை