ஹஷிஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இளைஞன் கைது!
புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி நகரில் கடையொன்றில் வைத்து போதை வியாபாரத்தை முன்னெடுத்து வருவதாக என கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரென இதன்போது தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள் 5 லட்சத்துக்கும் அதிக பெறுமதியென இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருளையும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை