இரு ஊசிகள் செலுத்தியதால் வலியால் துடித்து வாந்தி எடுத்து உயிரிழந்தார் 21 வயது யுவதி! பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்

வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்குச் சென்ற  21 வயதுடைய யுவதிக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில் அவர்  உயிரிழந்துள்ளார் என பேராதனை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடுகண்ணாவ பொத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த  மதுஷிகா ஜயரத்ன என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட  நோவு  காரணமாக கடந்த 11 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை  தாதி ஒருவர்  தனது மகளுக்கு  இரண்டு ஊசி மருந்துகளை செலுத்தியபோது,   தனது மகள்  வலியால் அலறி துடித்தார் எனவும், பின்னர் கழிவறைக்குச் சென்று வாந்தி எடுத்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார் எனவும் அவரது தாயார்  மாயா இந்திராணி தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.