72 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகளை புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்குத்  திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி செயலாளர் யு.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.